Sunday, February 13, 2011

இணைய பாதுகாப்பு




                                      கணினி பயன்படுத்துபவர்களுக்கு இருக்கும் முதல் பெரும் பிரச்சினை வைரஸ் (virus )  வைரஸ் என்பது அதாவது கம்ப்யூட்டர் வைரஸ் 
என்பது ஒரு மிக சிறிய கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் ஆகும். தனக்கு தரப்பட்ட வேலையை சரியாக செய்யும் ஒரு ப்ரோக்ராம். வைரஸ்களில் ஆறு வகைகள் 
உள்ளன.

முதல் வகை...

                                      இவை கம்ப்யூட்டர்இன் மெமரி பகுதிகள் நிறைந்து விட்டது போல காட்சியை தோற்றுவிக்கும். உங்கள் ஹர்ட் டிஸ்கில் 80 GB இடம் இருந்தாலும் 1 மட்டுமே உள்ள வைரஸ் பலூன் போல ஊதிக்கொண்டு இடத்தை நிரப்பி கொள்ளும் . இவைகளால் கம்ப்யூட்டர் கு எந்த பிரச்சினையும் இருக்காது.  




இரண்டாவது  வகை . . .


                                                 இவை கம்ப்யூட்டர் இல் உள்ள தகவல்களை அழிப்பதற்கு என்று  ப்ரோக்ராம் செய்யப்பட்டவை. இவைகளால் கணினி இயங்குவதற்கு தேவையான அவசியமான file களை கூட அழிக்க முடியும் என்பதால் இவை சற்று ஆபத்தானவை. 




மூன்றாவது வகை. . . 


                                                     spyware என்று அழைக்கப்படும் இவை கம்ப்யூட்டர் இல் உள்ள தகவல்களை திருடுவதற்கும் வேவு பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவையும் ஆபத்தானவை தான் 






   



அறிமுகம்


என்னுடைய பதிவுகளை பார்க்கும் போது உங்களுக்கு சந்தேகம் வரலாம் இது சைபர் செக்யூரிட்டி போன்று இல்லையே என்று . இணையத்தில் உங்கள் கணக்கை பாதுகாக்க வேண்டிய நீங்கள் திருடர்களையும் திருட்டையும் அறிந்தால்தான் உங்கள் கணக்கு திருடு போகாமல் பாதுகாக்க முடியும். இணைய பாதுகாப்பு குறித்த எந்த சந்தேகத்தையும் தெரிவியுங்கள் முடிந்தால் மெயிலில் இல்லாவிடில் கமென்ட் இல்
கூறவும் .  

வணக்கம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வணக்கம். 
தமிழில் இதுவரை சைபர்  செக்யூரிட்டி (cyber security ) மற்றும் சைபர் கிரைம்  (cyber crime ) தொடர்பான பதிவுகள் வரவில்லையென நினைக்கிறேன். எனவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏதோ என்னால்   முடிந்தது...